கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கோரி கவன ஈர்ப்பு போராட்டம்

கோவை உக்கடம் பகுதியில் சிஎம்சி காலனி குடியிருப்புகள் அகற்றப்பட்டு 4 ஆண்டுகளாக தகர கொட்டகையில் வசிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தர கோரி தமிழ் புலிகள் கட்சி தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகர் உக்கடம் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டி தரக்கோரி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

உக்கடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளுக்காக சிஎம்சி காலனி குடியிருப்புகள் அகற்றப்பட்டது. அப்பகுதியில் வசித்த மக்களுக்கு வேறு இடத்தில் தகர கொட்டகை அமைத்து தரப்பட்டது. மேம்பால பணிகள் முடிந்தவுடனேயே அதே இடத்தில் குடியிருப்புகள் கட்டி தரப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்திருந்தது.

ஆனால், மேம்பால பணிகள் நிறைவுற உள்ள நிலையிலும் குடியிருப்புகள் கட்டி தரப்படவில்லை. இதனால் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மக்கள் தகர கொட்டகையிலேயே வசித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பிலும் குடியிருப்புகள் கட்டித்தர தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிஎம்சி காலனியில் தூய்மை பணி புரியும் அருந்ததியர் மக்களின் குடியிருப்புகளை உடனடியாக கட்டி தர வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் உக்கடம் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஜூலை 29 அன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், முன்னாள் கோவை எம்பி பி ஆர் நடராஜன் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக குடியிருப்புகளை கட்டித் தர வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் போது மிதமான மழை பெய்தபோதிலும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது. முன்னதாக இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...