கோவையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பணியிட வசதி, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஜூலை 29 அன்று மனு அளித்தனர். 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் பணியிட வசதியின்றி, பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிந்து வரும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஜூலை 29 அன்று மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் சுமார் 65க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் இரவு பகலாக இயங்கி வருகின்றன. இதில் 250க்கும் மேற்பட்ட ஆண், பெண் மருத்துவப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்துவதற்கு, சுத்தப்படுத்துவதற்கு இடமின்றியும், இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட இடமின்றியும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

வாகனங்களை நிறுத்தவும், ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடங்களில் கழிவறையுடன் கூடிய ஓய்வு அறையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், ஆட்கள் பற்றாக்குறையால் பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுவதில்லை என்பதால், புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அரசு மருத்துவமனைகளில் வாகனங்களை சுத்தப்படுத்த தனி இடம் வேண்டும் என்றும், ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக இடமாற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகளின் பழிவாங்கும் போக்கைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மக்களின் உயிரை காக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அடிப்படை தேவைகளை அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...