கோவையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 26 வயது இளைஞர் கைது

கோவையில் 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் வசிக்கும் 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் ஏற்கனவே திருமணமானவர். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உக்கடம் வின்சென்ட் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 26 வயதான இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. பெண் அவரை தோழராக பழகினாலும், இளைஞர் அதை தவறாக பயன்படுத்தி நடந்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் வருத்தமடைந்த பெண், அவரை விட்டு விலகிச் சென்றார். ஆனால் இளைஞர் தொடர்ந்து அவரை தொலைபேசியில் அழைத்து, தன்னுடன் இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். சம்பவத்தன்று, பெண் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இளைஞர் அங்கு சென்று அவரது கன்னத்தில் அறைந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து பெண் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவல்துறையினர், இளைஞர் மீது பெண்ணை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்ததாக பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஜூலை 28 ஆம் தேதி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...