திருப்பூரில் அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கினார் எம்எல்ஏ செல்வராஜ்

திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், உலக கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஊக்கத்தொகையையும் எம்எல்ஏ செல்வராஜ் வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டிகள் நடைபெற்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது குப்ரான் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற முகம்மது குப்ரானுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்க நாணயம், சுழற்கோப்பை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், வரும் நவம்பர் மாதம் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்கவுள்ள ஹாசிமா, மித்ரா உள்ளிட்ட மூவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையினை எம்எல்ஏ செல்வராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்எல்ஏ செல்வராஜ், மாநகராட்சி மேயர் திருமதி மல்லிகா, மாநகராட்சி ஆணையர் திரு. விநீத், திருப்பூர் மாவட்ட கேரம் சங்கத் தலைவர் திரு. சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...