பொள்ளாச்சியில் கனமழை: வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயது இளைஞர் மற்றும் அவரது செல்லப்பிராணி உயிரிழந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திப்பம்பட்டி கிராமத்தின் அண்ணா தெருவில் வசித்து வந்த அன்பழகன் என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (28) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு தொடர்ந்து பெய்த கனமழையால், ஹரிஹரசுதன் தூங்கிக் கொண்டிருந்த அறையின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஹரிஹரசுதன் மற்றும் அவரது செல்லப்பிராணியான நாய்க்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்தனர். உடனடியாக ஹரிஹரசுதனின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலத்தில் பழுதடைந்த கட்டிடங்களில் வசிப்பது ஆபத்து என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...