கோவை அரசு மருத்துவமனையில் புதிய காத்திருப்போர் கூடம் - வானதி சீனிவாசன் பேட்டி

கோவை அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிய காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணி தொடங்கியது. வானதி சீனிவாசன் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.


Coimbatore: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட பல்வேறு மருத்துவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "கோவை அரசு மருத்துவமனையில் புதிய காத்திருப்போர் கூடம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டும் பணிகள் பூமி பூஜையுடன் துவங்கியுள்ளது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன," என்றார்.



"கோவை அரசு மருத்துவமனை என்பது கோவை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு சிகிச்சைகளுக்காக பெருமளவு மக்கள் வரும் இடம். இங்கு மக்கள் காத்திருப்பதற்கான இட வசதி முக்கியமானது. குறிப்பாக பிரசவ சிகிச்சை பிரிவின் அருகே பெண்கள் மற்றும் குழந்தைகள் காத்திருப்பதற்கு இந்த காத்திருக்கும் கூடம் 20 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது," என்று அவர் விளக்கினார்.

Jaica நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு இன்னும் முழுமையாக செயல்படவில்லை என்றும், இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். மாநில துறையினர் இந்த பணிகளை விரைவாக முடித்து தூய்மையான நிலையில் வளாகத்தை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



மேலும் அவர் பேசுகையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு குறித்தும், தமிழகத்தில் நிலவும் ஊழல் நிலைமை பற்றியும் கருத்து தெரிவித்தார். கோவை மாநகராட்சிக்கான புதிய மேயர் தேர்வு குறித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றியும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

ரயில் விபத்துகள் குறித்தும் பேசிய அவர், "தொழில்நுட்ப கோளாறு என்றாலும் மனிதக் கோளாறு என்றாலும் அதை சரி செய்து மக்களை காப்பது அரசின் கடமையாகும். அதை மத்திய அரசு செய்து வருகிறது," என்று கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...