பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாப்பு பணி தீவிரம்

பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்றிரவு 9 மணியளவில் அதன் முழு கொள்ளளவான 100 அடியை எட்டி நிரம்பியது. ஜூன், ஜூலை மாதங்களில் தொடர்ந்து நான்காவது முறையாக அணை நிரம்பி உள்ளது.



பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்வரத்து அப்படியே உபரி நீராக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.



இதனால் பவானிக் கரையோர பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசலில் பயணிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.



பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று ஜூலை 30 ஆம் தேதி ஆடிக்குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளனர்.

பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க கூடாது என எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டு கோவிலின் படித்துறை மற்றும் கரையோர பகுதிகளை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்க மாநில பேரிடர் மீட்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...