ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த் ?


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்து எடுக்க பிரதான அரசியல் கட்சிகள் இப்போதே ஆலோசனை நடத்த தொடங்கி இருக்கின்றன.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ்குமார் சந்தித்து பேசி உள்ளார். புதிய ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ.க. தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜார்க்கண்ட் மாநில பெண் கவர்னர் திரவுபதி முர்மும், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

அதே போன்று தென்னிந்தியாவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பெயரும், தொழில் அதிபர் "இன்போசிஸ்" நாராயண மூர்த்தி பெயரும் ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகிறது.

ஜனாதிபதி பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிசீலனையில் இருப்பதாக வரும் செய்திகள், தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்களின் தேவையறியாத ஒருவர், அவர் யாராக இருந்தாலும் ஒரு பிரபலமானவராக இருந்தால் மட்டுமே போதும் மக்களின் ஆளும் சக்தியடைவார் என்பதற்கு உதாரணமே தற்போது நடிகர் ரஜினியின் பெயர் ஜனாதிபதி தேர்தல் வரை சென்றிருப்பது ஆகும்.

பெரும்பாலான மக்களின் மனநிலையும் பிரபலங்களை நோக்கியே உள்ளதால் சில அரசியல் கட்டமைப்புகளுக்கான தகுதிகள் அற்றவரை ஆராய்ந்து பாராமல் தேர்வு செய்துவிடுகின்றனர்.

மக்கள் அந்த மனநிலையை மாற்றி சிறந்த நாட்டுப்பற்றும் பொதுநலமும் உடைய நபரை தங்களை ஆளும் ஒருவராக தேர்ந்தெடுப்பதினால் மட்டுமே நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் தீரும், மக்களின் வாழ்வும் சிராகும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...