உடுமலை அரசு பள்ளியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெஸ்டின் தலைமை தாங்கினார்.



நிகழ்ச்சியில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் S.A.I. நெல்சன், திருப்பூர் மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவைச் சேர்ந்த பிரவீன் குமார், உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...