கௌசிகா நதி புனரமைப்பு: ஜல் சக்தி அபியான் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கள ஆய்வு

கோவையில் ஜல் சக்தி அபியான் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கௌசிகா நதி புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர். வையம்பாளையம் தடுப்பணை மற்றும் அக்ரஹார சாமக்குளம் ஏரியை நேரில் பார்வையிட்டு, மக்கள் இயக்கத்தின் முயற்சிகளை பாராட்டினர்.


கோவை: கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் ஜூலை 30 ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், ஜல் சக்தி அபியான் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் குழுவிற்கு கௌசிகா நீர் கரங்களின் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.



கலந்தாய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் குழு கௌசிகா நதியின் புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தது. குறிப்பாக, கௌசிகா நீர்கரங்களின் முன்னெடுப்புகளின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட வையம்பாளையம் கௌசிகா நதி தடுப்பணை மற்றும் அக்ரஹார சாமக்குளம் ஏரியை பார்வையிட்டனர்.

கள ஆய்வின் போது, பல்வேறு நீர்நிலைகளில் மக்கள் இயக்கமாக மேற்கொண்டு வரும் மீட்டெடுப்பு முயற்சிகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நேரடி கள ஆய்வின் முடிவில், அதிகாரிகள் குழு முக்கியமான முடிவுகளை எடுத்தது.

கௌசிகா நதியையும், மாங்கரை நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் முழுமையாக புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைப்பதாகவும், இதற்கான தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுத்தர உறுதி அளிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...