வால்பாறை மண்சரிவில் இருவர் உயிரிழப்பு: அமைச்சர் முத்துசாமி ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கினார்

வால்பாறையில் சோலையார் அணை இடது கரையில் மண்சரிவு ஏற்பட்டு இரு பெண்கள் உயிரிழந்தனர். அமைச்சர் முத்துசாமி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கினார்.


கோவை: வால்பாறை சோலையார் அணை இடது கரை பகுதியில் மண் சரிந்து வீட்டின் மேல் விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவியை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

வால்பாறையில் சோலையார் அணை பகுதியில் இடது கரை என்ற இடத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் தனபிரியா ஆகிய இருவர் மீது வீட்டின் மேல் மண் சரிந்து விழுந்ததில் அவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.





இதைத் தொடர்ந்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்த இருவரின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர் முத்துசாமி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தலா மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மேலும், அவர்களுக்குத் தேவையான பொருள் உதவிகளையும் செய்தார்.



பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை பகுதியில் அதிக மழை காரணமாக மண் சரிந்து குடியிருப்பின் மேல் விழுந்ததால் இவர்கள் உயிரிழந்துள்ளனர். முதலமைச்சரின் உத்தரவின்படி தலா 3 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது," என்றார்.

மேலும், விபத்து நிவாரணமாக 4 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும், கட்சி சார்பாக 50,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சோலையார் அணை பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்து, மக்கள் வசிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான இடங்கள் உள்ளனவா என்பதை மாவட்ட ஆட்சியர் மூலம் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...