வயநாடு நிலச்சரிவு பாதிப்பு: மேட்டுப்பாளையம் சிஐடியூ குழு உதவிக்கு புறப்பட்டது

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மேட்டுப்பாளையம் சிஐடியூ பொது தொழிலாளர் சங்கத்தின் குழு ஜூலை 30 அன்று புறப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


கோவை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் மேட்டுப்பாளையம் சிஐடியூ பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒரு குழு வயநாட்டிற்கு புறப்பட்டுள்ளது.



சம்சுதீன் முகமது அலி ஜின்னா தலைமையிலான இந்த குழு ஜூலை 30 ஆம் தேதி வயநாட்டிற்கு புறப்பட்டது. இக்குழு அங்கு சென்று முதல் கட்ட உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க இக்குழு முன்வந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...