கோவை சுங்கம் பைபாஸில் குடிபோதையில் போலீசாருடன் தகராறு செய்த லாரி ஓட்டுநர் கைது

கோவை சுங்கம் பைபாஸில் போலீஸ் வாகன சோதனையின் போது, குடிபோதையில் வந்த லாரி ஓட்டுநர் முகமது நஸ்ருதீன் போலீசாருடன் தகராறு செய்ததால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் ஜூலை 29 அன்று நடந்தது.


கோவை: கோவை உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகே ஜூலை 29 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி, அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர்.

இந்நிலையில், உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன் (24) என்ற லாரி ஓட்டுநரை போலீசார் சோதனை செய்தபோது, அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த முகமது நஸ்ருதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். இது தொடர்பாக தேவகுமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், தண்ணீர் லாரி ஓட்டுநரான முகமது நஸ்ருதீன் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...