கேரள வெள்ளப் பாதிப்பு: கோவை மாநகராட்சி மீட்பு உபகரணங்களை அனுப்பி வைத்தது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் தலைமையில் மீட்பு வாகனங்கள் மற்றும் குளிர் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.


Coimbatore: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயமுத்தூர் மாவட்டத்தின் சார்பில், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில், மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர் பெட்டிகளை (Freezer Box) மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப அவர்கள் நேற்று (30.07.2024) நள்ளிரவு அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றி செல்வன், தெற்கு மண்டல குழு தலைவர் தனலட்சுமி, துணை ஆணையர் க. சிவகுமார், மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் சபரி ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பாபு, அஸ்லாம் பாஷா, இளஞ்சேகரன், ராஜலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்த முயற்சி கேரளாவின் வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாநகராட்சியின் இந்த உதவி, மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமையையும், பேரிடர் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...