வீட்டு வசதித் துறை கட்டும் குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும்: அமைச்சர் முத்துசாமி உறுதி

வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதித் துறை கட்டும் குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும் என உறுதியளித்தார்.


Coimbatore: வீட்டு வசதித் துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான முத்துசாமி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். வால்பாறையில் நிலச்சரிவால் வீடு இடிந்து உயிரிழந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது பேத்தி ஜனப்பிரியா குடும்பத்திற்கும், பொள்ளாச்சி திப்பம்பட்டியில் வீடு இடிந்து உயிரிழந்த ஹரிஹரசுதன் குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதித் துறை சார்பில் கட்டப்படும் புதிய குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும் என்ற உத்தரவாதத்துடன் ஒப்பந்ததாரர்களிடம் உறுதி பெற்றே பணிகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்புகளை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.



திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், 60 இடங்களில் வீட்டு வசதித் துறை சார்பில் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள மோசமான நிலையில் இருந்த கட்டிடங்களில் 90 சதவீதம் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் புதிய குடியிருப்புகள் கட்டி அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...