கோவையில் ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்திற்கு எதிர்ப்பு: அதிமுக-திமுக இடையே போஸ்டர் போர்

கோவை மாநகராட்சியில் ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பதிலடியாக திமுக கவுன்சிலர் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் ராட்சச போஸ்டர் வைத்துள்ளார்.


Coimbatore: கோவை மாநகராட்சியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற நுழைவாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக கவுன்சிலர்கள் வீடு கட்ட ஆன்லைன் அப்ரூவல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டம் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்நிலையில், கோவை மாநகராட்சி 80-வது வார்டு திமுக கவுன்சிலரும், பொது சுகாதார குழு தலைவருமான மாரிசெல்வன், அதிமுகவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ராட்சச அளவிலான போஸ்டர் ஒன்றை தயாரித்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளார். இந்த போஸ்டர் நகரில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.



இந்த சம்பவம் கோவை நகரில் அதிமுக மற்றும் திமுக இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...