கோவை மாநகர காவல்துறை நடத்தும் விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி: ரூ.1 லட்சம் பரிசு

கோவை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் குறு வீடியோ போட்டியை ஜூலை 30 அன்று அறிவித்துள்ளது. வெற்றியாளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.



கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் எனும் குறு வீடியோ போட்டி ஜூலை 30 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

போட்டியில் பங்கேற்பவர்கள் சைபர் குற்றம், போதைப்பொருள் ஒழிப்பு, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் தங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்வு செய்து 45 விநாடிகள் நீளமுள்ள ரீல்ஸ் வீடியோவாக எடுக்க வேண்டும். இந்த வீடியோக்களை @Coimbatore_City_Police எனும் கோவை மாநகர காவல்துறையின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை டேக் செய்து ஆகஸ்ட் 13, 2024க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டியாளர்கள் விரும்பினால் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு தலைப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவற்றைத் தேர்வு செய்து ரீல்ஸ் எடுத்து சமர்ப்பிக்கலாம். வெற்றியாளர்கள் ஆகஸ்ட் 17, 2024 அன்று அறிவிக்கப்படுவார்கள். இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் காவல்துறை தரப்பில் இருந்து சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தலைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு மொத்த பரிசுத் தொகையான ரூ.1 லட்சம் பிரித்து வழங்கப்படும்.

இந்தப் போட்டி குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன் கூறுகையில், "இந்த ரீல்ஸ் மூலம் மக்களிடம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தப் போட்டியின் நோக்கம். யார் வேண்டுமானாலும் ரீல்ஸ் எடுத்து எங்களுக்கு அனுப்பலாம். இந்தப் போட்டியில் நல்ல பரிசுத் தொகையை வழங்க உள்ளோம்," என்றார்.

மேலும் அவர், "பரிசைத் தாண்டி, குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை மக்களிடையே எடுத்துச் சொல்லும் தரமான ரீல்ஸ் வீடியோக்களை நீங்கள் வழங்கும்போது, அவற்றை எங்களின் அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் பகிர திட்டமிட்டுள்ளோம். உங்கள் வீடியோக்களை நிறைய மக்கள் பார்க்கும்போது அது உங்களுக்குப் பெருமை, காவல்துறைக்கும் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உதவியாக அமையும்," என்று தெரிவித்தார்.

இந்தப் போட்டி குறித்த கூடுதல் தகவல்களுக்கு 9894040459 என்ற எண்ணை அழைக்கலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...