கோவை இடிகரை பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து

கோவை இடிகரை பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு காருண்யம் பவுண்டேஷன் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வு பணியாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்றது.


கோவை: கோவை இடிகரை பேரூராட்சியில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டும் வகையில் தனியார் தொண்டு நிறுவனமான காருண்யம் பவுண்டேஷன் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

காருண்யம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி ஒரு நேர உணவு வழங்கி வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டம் இடிகரை முதல் நிலை பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பணி முடிந்த பின் காருண்யம் பவுண்டேஷன் நிறுவனர் கிருஷ்ணாத்மா மதிய உணவாக பிரியாணி வழங்கினார்.



காருண்யம் பவுண்டேஷன் நிறுவனர் கிருஷ்ணாத்மா பேசுகையில், "நாம் அனைவரும் இந்த துப்புரவு பணியாளர் சமூகத்திற்கு மிகவும் கடமைப்பட்டவர்கள். அன்றாடம் நாம் ஒதுக்கும் குப்பைகளையும் கழிவுகளையும் தயக்கமின்றி அகற்றி தூய்மைப்படுத்தும் மகத்தான பணியினை அவர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் இந்தப் பணியை ஒரு நாள் கூட செய்யாவிட்டால், நம்மால் எளிதில் கடந்து செல்ல முடியாது. நல்ல சுகாதாரத்துடன் வாழவும் இயலாது," என்றார்.

மேலும் அவர், "ஆண்டு முழுவதும் நமக்காக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமுதாயம் நோயின்றி வாழ உதவும் இந்த துப்புரவு பணியாளர்களை கருத்தில் கொண்டு, இந்த ஒரு நாள் அவர்களுக்கு உணவு அளித்து சிறப்பிக்க காருண்யம் பவுண்டேஷன் முடிவு செய்தது. இதனால் ஒவ்வொரு ஊராட்சியிலும் இந்த நிகழ்வை நடத்தி வருகிறோம். எங்கள் நோக்கத்தை நிறைவேற்ற உதவிய பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி," என்று தெரிவித்தார்.

கோவை காருண்யம் பவுண்டேஷன் அறக்கட்டளை 2020 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு அளித்து உதவி வருகிறது. இந்த நிகழ்வில் இடிகரை பேரூராட்சித் தலைவர் ஜனார்த்தனன், துணைத் தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உணவு பெற்றுக்கொண்ட துப்புரவு பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...