குன்னத்தூர் குளத்தில் களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், குன்னத்தூர் குளத்தில் களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது. இப்பணியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம் காட்டாம்பட்டியில் உள்ள குன்னத்தூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது.



இந்த பணி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்றது.



இந்த பணிக்கு Zahoransky Moulds & Machines Pvt Ltd நிறுவனம் நிதியுதவி வழங்கியது. குளத்தில் வைக்கப்பட்ட அடர்வனத்தில் களைகள் அகற்றப்பட்டதுடன், புதிய மரக்கன்றுகளும் நடப்பட்டன.



இந்த களப்பணியில் KPR கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும், சங்கரா கலை மற்றும் வணிகவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...