இரிடியம் ஏற்றுமதி பெயரில் மோசடி: கணவன் மனைவி கைது

கோவையில் இரிடியம் ஏற்றுமதி பெயரில் ரூ.25 லட்சம் மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ.4.99 லட்சம் பணம், 77 கிராம் தங்க நகைகள் அடங்கும்.


கோவை: கோவை மாவட்டத்தில் இரிடியம் ஏற்றுமதி பெயரில் நடந்த பெரிய மோசடி வழக்கில் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை எண்ணூரைச் சேர்ந்த சீனிவாசனுக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் மூலம் கோவை இடிகரைச் சேர்ந்த சியாம் (எ) ஜாய் மோகன் அறிமுகமானார். சியாமும் அவரது மனைவி சஜிதாவும் தங்களிடம் விலைமதிப்பற்ற இரிடியம் இருப்பதாகவும், அதை வெளிநாட்டில் விற்றால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்றும் கூறி சீனிவாசனை நம்ப வைத்தனர்.



இரிடியத்தை சோதனை செய்ய Y.G.சேகர் என்பவரை அறிமுகப்படுத்தி, சீனிவாசனிடம் இருந்து ரூ.10 லட்சம் பெற்றனர். பின்னர், வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்வதாகக் கூறிய வருண்பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண்குமார் மற்றும் ஆனந்த வெங்கடேசன் ஆகியோர் இரிடியத்தை உண்மையானது என்று உறுதிப்படுத்தி, வெளிநாட்டில் விற்பதற்காக மேலும் ரூ.15 லட்சம் பெற்றனர்.

தொடர்பு துண்டிக்கப்பட்டதால் சந்தேகமடைந்த சீனிவாசன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த குமரேசன் நாடார் மகன் சியாம் (எ) ஜாய் மோகன் (44) மற்றும் அவரது மனைவி சஜிதா (38) ஆகியோர் ஜூலை 31 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரிடியம், ரூ.4,99,000 ரொக்கப் பணம் மற்றும் சுமார் 77 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...