இடிகரை மக்கள் சாலை வசதி கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இடிகரை பேரூராட்சியில் சாலை வசதி, குடிநீர் பிரச்சினை தீர்வு மற்றும் பாலம் அமைக்க கோரி மக்கள் போராட்டம். காவல்துறை தலையீட்டால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 6 மாதத்தில் தீர்வு காண உத்தரவாதம் அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் இடிகரை பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு மணிகாரம்பாளையம் பகுதி மகாலட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று (ஜூலை 31) பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீர் பிரச்சினை தீர்வு மற்றும் பாலம் அமைத்து தர வேண்டி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தை அணுகியுள்ளனர். ஆனால், வார்டு கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் செவி சாய்க்காத காரணத்தினால், பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆறு மாத காலத்திற்குள் அப்பகுதியில் சாலை வசதி மற்றும் பாலம் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவாதத்தை அடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் இடிகரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...