பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு

பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியில் மங்களேஸ்வரன் புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றார். முன்னாள் அலுவலர் கணேசன் ஈரோடு மாவட்டத்திற்கு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக மங்களேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த கணேசன், ஈரோடு மாவட்டத்திற்கு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று மாற்றப்பட்டார். இதையடுத்து, சிவகங்கையில் பணியாற்றி வந்த மங்களேஸ்வரன், ஜமீன் ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மங்களேஸ்வரனுக்கு பேரூராட்சி தலைவர் அகத்தூர் சாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர் சையது அபுதாஹிர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...