கோவையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது

கோவையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் சுங்கம் பைபாஸ் சாலை மற்றும் துடியலூர் பகுதிகளில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.


Coimbatore: கோவை நகரில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை கோவையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, கோவை சுங்கம் பைபாஸ் சாலை பகுதியில் மதுவிலக்கு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில், அந்த நபர் ஒடிசா மாநிலம் காந்தமால் பகுதியைச் சேர்ந்த பீஷ்மா தண்டி (29) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அதேபோல், துடியலூர் இடிகரை அருகே நடத்தப்பட்ட சோதனையின்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர்கள் திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் (45) மற்றும் ஒடிசா மாநிலம் பாலாங்கீர் பகுதியைச் சேர்ந்த ஜடாபா பேஷ்ரா (33) என்பது தெரியவந்தது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் மொத்தம் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தல் தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...