கோவையில் ரூ.3 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு இடம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு

கோவை மாநகராட்சி 51வது வார்டில் உள்ள கிருஷ்ணா நகரில் 16 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்த இடம் 2007ல் தனிநபருக்கு விற்கப்பட்டிருந்தது.


Coimbatore: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 51வது வார்டில் உள்ள கிருஷ்ணா நகரில் ரூ.3 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு இடம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.

1980ஆம் ஆண்டு 7 ஏக்கர் பரப்பளவில் 100 மனைகளாக பிரிக்கப்பட்ட கிருஷ்ணா நகரில், 16 சென்ட் நிலம் பொது ஒதுக்கீட்டு இடமாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2007ஆம் ஆண்டு இந்த இடம் வரன்முறை செய்யப்பட்டு தனிநபருக்கு விற்கப்பட்டது. அப்போது அந்த இடத்தில் இருந்த கிணறும் மூடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து 2019ஆம் ஆண்டு சமூக செயல்பாட்டாளர் தியாகராஜன் மாநகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆக்கிரமிப்புதாரருக்கு மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அவர் நேரடி விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில், உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழு ஆகஸ்ட் 1ஆம் தேதி கிருஷ்ணா நகர் பகுதிக்குச் சென்று, பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில் இருந்த இரும்புத் தகடுகள் மற்றும் முட்புதர்கள் அகற்றப்பட்டன. பின்னர், "இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடம்" என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. தற்போது இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...