விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம், கடன் தள்ளுபடி, கள் இறக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Coimbatore: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாநில தலைவர் AS பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கிக் கடனை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு ஆதார விலை இல்லாததால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். மேலும், விவசாயிகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை என்றும், விவசாயிகள் விவசாய தோட்ட பத்திரங்களை அடமானம் வைத்து விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, மத்திய மாநில அரசுகள் வழங்கிய கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கடன் பெறும் விவசாயிகளிடம் கடன் தொகையை திருப்பி கேட்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். மேலும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தின் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...