மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த K'sirs சர்வதேச பள்ளி மாணவர்கள் இராமேஸ்வரம் குந்துகால் கடற்கரையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குப்பைகளை அகற்றி, மாங்குரோவ் மரக்கன்றுகளை நட்டனர்.


மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள K'sirs சர்வதேச பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர்கள், அருளகம் மற்றும் மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு குழுவுடன் இணைந்து இராமேஸ்வரம், குந்துகால் கடற்கரை பகுதியில், மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.



கடல்வாழ் உயிரிகளை பாதுகாக்கும் வகையில், K'sirs பள்ளி மாணவர்கள் குந்துகால் கடற்கரை பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றினர். மேலும் அவர்கள், மாங்குரோவ் காடுகளை அதிகரிக்கும் நோக்கோடு கடற்கரை பகுதிகளில் மாங்குரோவ் மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி குழந்தைகளின் இந்த செயல் பார்ப்போரை நெகிழச்செய்தன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...