மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை மண்சரிவு காரணமாக ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ஆகஸ்ட் 1 அன்று ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையிலான மலை ரயில் சேவை ஆகஸ்ட் 1 அன்று ரத்து செய்யப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதே இந்த முடிவுக்கு காரணம்.

அடர்லி மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவில் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததுடன், மரங்களும் சாய்ந்து ரயில் பாதையின் குறுக்கே விழுந்துள்ளன. இதன் காரணமாக, ஆகஸ்ட் 1 அன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டு, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.



இந்த எதிர்பாராத சூழ்நிலை காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...