சிறுமுகை பவானிசாகர் அருகே வெள்ளத்தில் மூழ்கிய வாழைத்தோட்டங்கள்; ஆபத்தான முறையில் அறுவடை செய்யும் விவசாயிகள்

சிறுமுகை பவானிசாகர் நீர்த்தேக்க பகுதி அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. விவசாயிகள் ஆபத்தான முறையில் வாழைத்தார்களை அறுவடை செய்கின்றனர்.


கோவை: சிறுமுகை பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை மரங்களை பயிரிட்டு வருகின்றனர்.



இப்பகுதியில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மாயாற்று நீர்த்தேக்க பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளப்பெருக்கின் காரணமாக மாயாற்று நீர்த்தேக்க பகுதியின் சுற்று வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.



இந்நிலையில், தங்களது வாழைத் தோட்டங்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஆபத்தான முறையில் செயல்பட்டு வருகின்றனர்.



வெள்ளத்தில் மூழ்கிய வாழைத் தோட்டங்களுக்குள் சென்று, விவசாயிகள் வாழைத்தார்களை அறுவடை செய்து வருகின்றனர். குறிப்பாக, ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று பலர் இவ்வாறு ஆபத்தான முறையில் அறுவடையில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...