ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடப் பணி தொடக்கம்

ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டும் பணி ஆகஸ்ட் 1 அன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி பணியை துவக்கி வைத்தார்.


கோவை: ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் புதிய நூலக கட்டிடம் கட்டும் பணி ஆகஸ்ட் 1 அன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. ராமசந்திரா நகரில் உள்ள திருவள்ளுவர் அரங்கத்தில் இந்த பணி தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு நூலக ஆணை நிதியின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் இந்த நூலக கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது. பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேரூராட்சி துணை தலைவர் சதீஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிரஞ்சீவி கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...