கோவை பெட்ரோல் பங்கில் மோசடி: பணம் கொடுக்காமல் தப்பிய கார் ஓட்டுநர்

கோவை புட்டுவிக்கியில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்கில் ஆகஸ்ட் 1 அன்று ஒரு கார் ஓட்டுநர் ₹3,000 மதிப்புள்ள பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


கோவை: கோவை புட்டுவிக்கி பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்கில் ஒரு கார் ஓட்டுநர் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி மதியம், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஸ்விஃப்ட் காரில் பெட்ரோல் பங்கிற்கு வந்தார்.



அங்கிருந்த பெண் ஊழியரிடம் 3,000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பும்படி கேட்டுக்கொண்டார்.

பெட்ரோல் நிரப்பப்பட்ட பின்னர், எதிர்பாராத விதமாக அந்த நபர் பணம் செலுத்தாமலேயே காரை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பிச் சென்றார்.



பங்கின் ஊழியர் உடனடியாக கூச்சலிட்டு பின்தொடர்ந்தார், ஆனால் கார் நிற்காமல் சென்றுவிட்டது.

சக ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் அந்த காரை துரத்திச் சென்றனர். ஆனால், அதற்குள் கார் ஓட்டிய நபர் தப்பித்துச் சென்றுவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் பெட்ரோல் பங்கின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மோசடி செய்த நபரை கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...