கோவை வ.உ.சி மைதானத்தில் வாகா எல்லை அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சி: போலீசார் தீவிர பயிற்சி

கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழாவில் வாகா எல்லை அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ஆயுதப்படை போலீசார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவையில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் வ.உ.சி மைதானத்தில் முதன் முறையாக வாகா எல்லையில் நடைபெறும் அணிவகுப்பை போன்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



வாகா எல்லையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பு உணர்ச்சி பூர்வமிக்க நிகழ்ச்சியாக இருக்கும். அதே போன்ற அணிவகுப்பை கோவையில் நடத்த ஆயுதப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.



இந்த நிகழ்ச்சிக்கான தீவிர பயிற்சியில் கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் தற்போது ஆகஸ்ட் 2 முதல் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு வாகா எல்லையில் பயிற்சி பெற்ற கமாண்டோ அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.



பொதுமக்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தால் இந்த சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...