கோவையில் திருமணம் செய்வதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் கைது

கோவையில் திருமணம் செய்வதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த விஸ்வதர்சினி என்ற பெண்ணை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.


Coimbatore: கோவையில் திருமணம் செய்வதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (57) என்பவர் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்து வந்தார். இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் வீதியைச் சேர்ந்த விஸ்வதர்சினி (48) என்பவருடன் அறிமுகமானார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது.

2020ஆம் ஆண்டு, விஸ்வதர்சினி தனது மகன் வெளிநாட்டுக் கல்லூரியில் படிப்பதற்காக 10 லட்ச ரூபாய் தேவை என்றும், தன்னிடம் 8 லட்ச ரூபாய் இருப்பதாகவும், மீதி 2 லட்ச ரூபாய் வேண்டும் என்றும் முத்துராமலிங்கத்திடம் கேட்டார். முத்துராமலிங்கம் 2 லட்ச ரூபாய் கொடுத்தார். ஆனால் விஸ்வதர்சினி பணத்தைத் திருப்பித் தரவில்லை மற்றும் திருமணமும் செய்யவில்லை.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் முத்துராமலிங்கம் புகார் அளித்தார். விசாரணையில், விஸ்வதர்சினி மீது சென்னை ராயப்பேட்டை மகளிர் போலீசிலும் இதே போன்ற ஒரு வழக்கு பதிவாகியிருந்தது தெரியவந்தது. மேலும், செல்வபுரத்தில் மோசடி வழக்கும், வடவள்ளி போலீஸ் நிலையத்தில் மிரட்டல் வழக்கும் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த விஸ்வதர்சினியை, முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் தேடி வந்தனர். ஆகஸ்ட் 1 இரவு பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...