கோவை சிவாஜி காலனியில் வயநாடு பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி

கோவை சிவாஜி காலனியில் வயநாடு பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். வழக்கறிஞர் புஷ்பாணந்தம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவை சிவாஜி காலனி பகுதியில் கேரள மாநிலம் வயநாடு பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளன. இந்த பேரிடரில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கோவை சிவாஜி காலனி பகுதியில் "அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை" அமைப்பின் சார்பாக அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் புஷ்பாணந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பங்கேற்றவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் வழக்கறிஞர் தமிழலகன், லட்சுமி, திவ்யா, ஜெபா, வர்ஷா வர்ஷினி, மோகன் ராஜா, ஜெயமணி, முத்து, ஞானமணி, குமார், தனலட்சுமி, கோவில் மேடு பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...