பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் வட்டாரப் போக்குவரத்து துறை, பொள்ளாச்சி உட்கோட்டம் காவல்துறை மற்றும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், NIA கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராசன் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



முன்னாள் மாவட்ட முதன்மை போக்குவரத்து காப்பாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு, விபத்து எவ்வாறு நடக்கிறது, விபத்தை எப்படி தவிர்க்கலாம் போன்ற தகவல்களை வீடியோ மூலம் காண்பித்து விளக்கமளித்தார். சாலை விபத்துகளில் 20 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முகாமில், மாணவ மாணவிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுதல், சிக்னல்களை மதித்தல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், கட்டாயமாக ஹெல்மெட் அணிதல் போன்ற முக்கிய விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Newsletter

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...