கற்பகம் செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான செவிலியர் தர குறியீடுகள் கருத்தரங்கு

கோவையில் உள்ள கற்பகம் செவிலியர் கல்லூரியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி "செவிலியர் தர குறியீடுகள்" குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. 17 கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் உள்ள கற்பகம் செவிலியர் கல்லூரி சார்பில் "செவிலியர் தர குறியீடுகள்" (Quality Indicators in Nursing) குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி நடைபெற்றது.



தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அலுவலர் (DMChO) விஜயலட்சுமி, கற்பகம் கல்லூரியின் தலைவர் டாக்டர் ரா. வசந்த குமார், Chairman and Managing Trustee முருகய்யா, CEO வெங்கடேசன், Medical Director மற்றும் கற்பகம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சுதா சிறப்பு கண்காணிப்பாளராக பங்கேற்றார்.



தொடர்ந்து, ஏழு சிறப்பு பேச்சாளர்கள் தங்கள் உரையை நிகழ்த்தினர். நிகழ்ச்சியின் இடையில் அறிவியல் சுவரொட்டி மற்றும் அறிவியல் காகித விளக்கக் காட்சியை சிறப்பு விருந்தினர்கள் மதிப்பீடு செய்தனர். மொத்தம் 17 கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியின் முடிவில், கலந்து கொண்டு சிறப்பித்த பேச்சாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காலை 8.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி மாலை 6.30 மணியளவில் தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...