தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் 8 வரை நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 573 தன்னார்வலர்கள் பங்கேற்கும் இந்த முகாமில் பல்வேறு கிராம மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாட்டு நல பணித்திட்டத்தின் சிறப்பு முகாம் ஆகஸ்ட் 2 முதல் 8 வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் இரண்டாம் ஆண்டு பயிலும் 573 தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.

தென்கரை, போளுவாம்பட்டியில் ஆகஸ்ட் 2 அன்று காலை 10 மணியளவில் இந்த சிறப்பு முகாம் தொடங்கியது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின் படி இந்த முகாம் நடைபெறுகிறது.



மாணவர் நல இயக்குநரகத்தின் முதன்மையர் முனைவர் நா. மரகதம் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். திட்டமிடல் மற்றும் கண்காணிப்புத்துறை முன்னாள் இயக்குநர், முனைவர் ஜே. வெங்கட பிரபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தென்கரை பஞ்சாயத்து தலைவர் திருமதி மஹாலக்ஷ்மி, தென்கரை செயல் அலுவலர் திரு பழனியப்பன், மாதம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு முத்துராஜா, மாதம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் திரு சி.கிருஷ்ணசாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



தென்கரை, செல்லப்பன் கவுண்டன்புதூர், சென்னனுர், மதிபாளையம், கரடிமடை, மற்றும் குப்பனுர் ஆகிய கிராமங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, மற்றும் பிற துறைகளில் செயல் விளக்கங்கள் ஏற்பாடு செய்யப்படும். மேலும், தூய்மை இயக்கம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய முகாம்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கல்வித் திட்டங்கள் போன்றவைகளுக்கும் கவனம் செலுத்தப்படும்.

இந்த சிறப்பு முகாம் மாணவர் நலத்துறையின் முதன்மையர் முனைவர் நா.மரகதம் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ம. பிரகதீஸ்வரன் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...