பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்: காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகள் தாமதம் - வானதி சீனிவாசன் விமர்சனம்

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகள் தாமதம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம். விவசாயிகள் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்.


Coimbatore: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் விவசாயத்திற்கு முக்கியமான பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகள் தாமதம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், காண்டூர் கால்வாயின் மராமத்துப் பணிகள் ஜூலை மாதமே முடிவடைந்திருக்க வேண்டிய நிலையில், முதல்வர் ஸ்டாலினின் திறனற்ற நிர்வாகத்தால் அவை இன்னும் முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக, பரம்பிக்குளம் அணை நிரம்பினாலும், திறக்கப்படும் தண்ணீர் குறித்த நேரத்தில் திருமூர்த்தி மலையை சென்றடைவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் பிஏபி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் முன்னெச்சரிக்கையாக காண்டூர் கால்வாயை தூர்வாருதல் போன்ற பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பெய்யும் பருவமழை நீரை சரியான முறையில் சேமித்து பாதுகாப்பதே சிறந்த நிர்வாகம் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், விவசாயிகளும் பயனடையும் வகையில் காண்டூர் கால்வாயின் பராமரிப்பு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டியது முதல்வரின் தலையாய கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...