போதைப் பொருள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வுக்காக கோவை காவல் ஆணையர் 78 கி.மீ சைக்கிள் பேரணி

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வுக்காக 78 கி.மீ சைக்கிள் பேரணியை நடத்தினார். பொதுமக்கள், இளைஞர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, போதைப் பொருள் பயன்பாடு மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 78 கிலோமீட்டர் தொலைவுக்கு சைக்கிள் பேரணி ஒன்றை நடத்தினார்.



இந்த பேரணி காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி, டவுன் ஹால், செட்டி வீதி, பேரூர், பச்சாபாளையம், ஆலந்துறை, மாதம்பட்டி, சாடி வயல் வழியாக ஈசா யோகா மையம் வரை சென்றது. பின்னர் அதே பாதையில் திரும்பி, அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடைந்தது.



பேரணியில் 16 வயது முதல் பெரியவர்கள் வரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பின்னர் அவரும் மற்ற காவல் துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து சைக்கிளில் பயணித்தனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்பு, மேலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.



பேரணியின் இறுதியில், பி.ஆர்.எஸ் மைதானத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் போதைப் பொருள் பயன்பாட்டை தவிர்ப்பது மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த முயற்சி பொதுமக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, இந்த முக்கிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...