கோவையில் வட்டார வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் வட்டார வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான பெண்கள் ஆகஸ்ட் 7, 2024க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் கீழ், ஒவ்வொரு வட்டாரத்திலும் மூன்று வட்டார வள பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பணியிடங்களுக்கு கல்வி மற்றும் அனுபவ தகுதிகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வட்டார வள பயிற்றுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு:

1. மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. 01.08.2024 அன்று 25 முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

3. ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

4. மகளிர் சுய உதவிக் குழு மற்றும் கூட்டமைப்பில் 2 முதல் 3 வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பயிற்சியளிக்க ஆர்வமுள்ளவராகவும், ஒருங்கிணைத்து கண்காணிக்கக் கூடியவராகவும், நல்ல பேச்சுத் திறன் மற்றும் பயிற்சி கையாளும் திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், கணினியில் குறைந்தபட்சம் MS Word, Excel பயன்படுத்தத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

இந்த தகுதிகள் உள்ளவர்கள் ஆகஸ்ட் 7, 2024 தேதிக்குள், இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2-வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் 641 018 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...