முத்துராமலிங்க தேவர் குறித்த அவதூறு: யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

கோவையில், முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது விடுதலை கேள்விக்குறியாக உள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில், முத்துராமலிங்க தேவர் தொடர்பாக அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாயப்பட்டதால், ஜாமினில் வெளியே வர முடியாமல் இருந்தார்.

பின்னர் உச்சநீதிமன்றம் சென்று சில வழக்குகளுக்கு ஜாமின் பெற்ற சவுக்கு சங்கர், தமிழகத்திலும் ஒவ்வொரு வழக்கிலும் ஜாமின் பெற்று வந்தார். இந்நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15 அன்று யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கோவை மத்திய சிறையில் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரை ஆகஸ்ட் 2 அன்று கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார், அவரை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகள் அனைத்திலும் அவர் ஜாமின் பெற்றால் மட்டுமே வெளியே வர முடியும். அதுவரை அவர் சிறையில் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...