உடுமலையில் தீரன் சின்னமலை நினைவு தினம்: பொள்ளாச்சி எம்.பி. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மரியாதை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொள்ளாச்சி எம்.பி. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலையின் 219வது நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரவி மற்றும் மாவட்டச் செயலாளர் ரகுபதி ராகவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், உடுமலை நகரச் செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.



மேலும், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மெட்ராத்தி தங்கராஜ், அப்பர் குரூப் சேர்மன் இளங்கோ, சபாபதி, வசந்தம் புக்ஸ் பெரிய தம்பி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட, ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய வீர தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தியது, தீரன் சின்னமலையின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் விதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...