ஆடிப்பெருக்கு: அமராவதி அணையில் படகு சவாரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு சாதனங்களுடன் படகு சவாரியில் உற்சாகமாக பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் ஆடிப்பெருக்கு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

காமராஜரால் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அமராவதி அணை, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.



கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், ஆடிப்பெருக்கு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் இந்த படகு சவாரியில், சுற்றுலா பயணிகள் தகுந்த பாதுகாப்பு சாதனங்களுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். படகு சவாரி மீண்டும் துவங்கியதால் அமராவதி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...