ஆடி 18: பேரூர் படித்துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு விநியோக நடவடிக்கைகள்

ஆடி 18ஐ முன்னிட்டு பேரூர் படித்துறையில் தன்னார்வலர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டு, படையல் பொருட்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை பேரூர் படித்துறையில் ஆடி 18ஐ முன்னிட்டு இன்று (03.08.2024) சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு விநியோக நடவடிக்கைகள் நடைபெற்றன. இம்மண்ணில் வாழ்ந்து, நம்மை விட்டுச் சென்ற முன்னோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆற்றங்கரைகளில் படையலிட்டு வணங்கும் நாளான ஆடி 18ஐ முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பேரூர் படித்துறையில் ஒன்று கூடினர்.

இதன் காரணமாக அப்பகுதியில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகள் காணப்பட்டன. இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல் மற்றும் உணவுப் பொருட்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.



மக்கள் படையலாக விட்டுச் சென்ற சுமார் 2000 கிலோ அளவிலான ஆப்பிள், திராட்சை, கொய்யா, வாழைப்பழம், தேங்காய், இனிப்புகள், பலகாரங்கள் மற்றும் துணிகளை பிரித்து எடுத்து, ஏழை எளிய மக்களுக்கும், பசியால் வாடுவோருக்கும் No Food Waste அமைப்பின் உதவியுடன் விநியோகிக்கப்பட்டன.



இந்த அறப்பணியில் பேரூர் பேரூராட்சி மற்றும் அதன் ஊழியர்கள், நொய்யல் படித்துறை பாதுகாப்பு குழு, நொய்யலாறு அறக்கட்டளை ஆகியோருடன் Sri Krishna Adhithya College of Arts and Science, PSG College of Pharmacology, Hindhusdhan Arts and Science கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பான களப்பணியாற்றினர்.



இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கு உதவும் வகையில் அமைந்தது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன், இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...