கோவையிலிருந்து வயநாட்டிற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு கோவையிலிருந்து தமிழக வெற்றி கழகம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இது முதல் கட்ட உதவியாகும்.


Coimbatore: கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பல நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் விக்கி மற்றும் இளைஞர் அணித் தலைவர் பாபு ஆகியோர் தலைமையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிவாரணப் பொருட்களில் உடைகள், காலணிகள், போர்வை, தலையணை, பக்கெட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும். முதல் கட்டமாக ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை இப்பொருட்கள் கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வயநாடு மக்களுக்குத் தேவையான பொருட்களை தமிழக வெற்றி கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், பல தன்னார்வலர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...