கோவை உக்கடத்தில் ரூ.460 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்

கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே ரூ.460 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை ஆகஸ்ட் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழ்புதல்வன் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.



Coimbatore: கோவை உக்கடத்தில் ரூ.460 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை வருகிற ஆகஸ்ட் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையின் வணிக பகுதியான உக்கடத்தில் உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க கோவை வரும் முதல்வர், இந்த பாலத்தை திறந்து வைக்கிறார். கோவை நகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, உக்கடம்-ஆத்துப்பாலம், திருச்சி ரோடு ஆகிய சாலைகளில் மேம்பாலம் கட்ட அரசு முடிவு செய்தது.

உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி 2 கட்டங்களாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. மொத்தம் ரூ.460 கோடியில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் தற்போது முழுமையாக நிறைவடைந்து விட்டது. இதில் மேம்பாலத்தில் இருந்து சுங்கம் செல்லும் சாலையில் ஏறுதளம், இறங்குதளம் மட்டும் அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது. மீதம் உள்ள அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை அரசு கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தைத் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து, கோவை வடவள்ளி செல்லும் லாலி ரோடு சந்திப்பில் அமைய உள்ள புதிய மேம்பாலம், செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

மேலும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம், கோவை வ.உ.சி. மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு வீதி, கோவை கடலைக்கார சந்தில் புதிதாக கட்டப்பட்ட ஆதரவற்றோர் தங்கும் விடுதி, கோவை புலியகுளம் அரசு கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அரசு துறை செயலாளர்கள் செய்து வருகிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...