கோவை கருமத்தம்பட்டியில் கருணாநிதி சிலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் சு.முத்துசாமி

கோவை கருமத்தம்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.


Coimbatore: கோவை கருமத்தம்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கும் பணி இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது. இந்த பணியை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட செயலாளர்கள் தளபதி முருகேசன், தொ.அ ரவி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிபி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



கோவைக்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வரவுள்ளதால், அன்று இச்சிலை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...