கோவை மதுகரை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்ற இருவர் கைது

கோவை மதுகரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரை சோதனையிட்டதில், 150 கிராம் கஞ்சா மற்றும் 55 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, ஆகஸ்ட் 2 ஆம் தேதி மதுக்கரை ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தார்.

சோதனையின் போது, அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் 55 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கோவை சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த மோகன் மகன் சிஜு (வயது 25) மற்றும் சிட்கோ சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தேவராஜ் மகள் ஷர்மிளா (வயது 27) என அடையாளம் காணப்பட்டனர்.

விசாரணையில், சிஜு ஒரு லேத் ஒர்க் ஷாப்பில் டர்னராக வேலை செய்து வருவதும், ஷர்மிளா B.Com., C.A. படித்து முடித்து ஆடிட்டராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், எடை இயந்திரம், மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதைப் பொருட்கள் விற்பனை செய்த இந்த இருவரும் எவ்வாறு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர், யாரிடமிருந்து இவற்றை பெற்றனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...