காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் போலி காவலர்கள் பூசாரியிடம் பணம் பறிப்பு - மூவர் கைது

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் போலி காவலர்களாக நடித்து பூசாரியிடம் ரூ.10,000 பறித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் போலி காவலர்களாக நடித்து பூசாரியிடம் பணம் பறித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர், சின்ன கரும்பாலத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் (44) என்ற கோவில் பூசாரி, ஆகஸ்ட் 2 அன்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மூவர் தங்களை காவலர்கள் என்று கூறி, அவரது பையை சோதனை செய்ய கேட்டனர். சோதனையின் போது பையிலிருந்த ரூ.10,000-ஐ எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள காவல் நிலையத்தில் விளக்கம் அளிக்குமாறு கூறிவிட்டு ஆட்டோவில் தப்பினர்.

இது குறித்து நித்தியானந்தம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் புலியகுளம், மசால் லே-அவுட்டைச் சேர்ந்த கார்த்திக் (29), மதுரையைச் சேர்ந்த ஜோதிராஜ் (21), ஷேக் அப்துல்லா (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கார்த்திக் ஆட்டோ ஓட்டுநராகவும், ஜோதிராஜ் கோவையில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. கைதான மூவரிடமிருந்து பறிக்கப்பட்ட ரூ.10,000 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...