உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டு வண்டியில் சிறப்பு வழிபாடு

அடி அமாவாசையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னோர்களின் அறிவுரையின்படி இந்த வழிபாடு கால்நடைகளின் நலனுக்காக மேற்கொள்ளப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் அடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். மேலும் பலர் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திரளான பொதுமக்கள் தர்பணம் கொடுத்தனர்.

உடுமலை, பொள்ளாச்சி, Dharapuram, கிணத்துக்கடவு, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது மாட்டுவண்டிகளில் வருகை புரிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.



முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி, தங்களது கால்நடைகள் நோய் நொடியின்றி, நீண்ட நாட்கள் நலமுடன் இருக்க இரட்டை மாட்டுவண்டிகளுடன் அடி அமாவாசையன்று திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றும், காங்கேயம் இன நாட்டு மாடுகள் வளர்ச்சி பெருகும் என்றும் விவசாயிகள் நம்புகின்றனர்.

"பல ஆண்டுகளாக முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் இங்கு வருகிறோம். இதனால் கால்நடைகள் நோய் நொடியின்றி நலமாக தொடர்ந்து இருப்பதாக உணர்கிறோம்," என விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...