உடுமலை ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் கேரள நிவாரண நிதிக்கு ரூ.50,000 உதவி

உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர் கிருஷ்ணன், வயநாடு மண்சரிவு பாதிப்புக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50,000 அனுப்பி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர் கிருஷ்ணன், வயநாடு மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50,000 அனுப்பி வைத்துள்ளார்.

வயநாடு மண்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கேரள முதல்வர் அனைவரும் நிதி உதவி வழங்க வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், உடுமலையில் முதல் நபராக கிருஷ்ணன் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.50,000 ரூபாயை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.



கிருஷ்ணன் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசுக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், தனது மனைவியின் நினைவாக பத்தாண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

இவரது தொடர்ந்த சமூக சேவை மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை பாராட்டுக்குரியது என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...